Skip to main content

Posts

Showing posts from April, 2017

கூந்தல் சுதந்திரம்

நீளக்கூந்தலடி கண்ணம்மா நின் திசையற்று நீளவில்லையடி பட்டு நூட்களடி கண்ணம்மா பலவிஞ்சை மதியோடளிக்குதடி..
காடி நில்லாது பிட்டம் வரை நீண்டுற்று முன்புறத்தில் கருவிழித்திரையாகின் பின்னால் நானல்லோ யென எனை நாண சிரிக்குதடி..
முடிச்சுகள் முழு முருகாய் களைதல் முக பொலிவாய் இருக்க நின்கவின் மறைக்கும் அள்ளி முடிதல் ஏனோ எமக்கு அந்நியமே!
சிறையிட்ட கைதியாய் நின்கூந்தல் நிறைக்கொள்ளாதடி அள்ளிமுடிந்தவையை அவிழ்த்துவிடு கொஞ்சம் காற்றிலாடட்டும்.., கிழக்கும் மேற்குமாய் அசைந்து கொஞ்சம் வடக்கும் தெற்குமாய் குதித்து..
களைதலாகியதில் நிறைக்கொள்ளும் அழகை காண கண்ணின் பிசிர்தசையும் பார்வை கேக்குதடி.. சுதந்திர களைதல் கொள்ளட்டும் கண்ணம்மா நின் கூந்தலும்.. கொஞ்சம் நீயும்!
-தம்பி கூர்மதியன்

காதலாகிய நாள் ஒன்றில்...

’என் உதிரம்க்கொண்ட எழுத்தச்சு உன் பெயரை தவிற வேறு எழுதவில்லையடி அதை உம்மோடு இணைத்து நம் இணைவின் சாட்சிக்கு அழகுயிரை பெத்தெடுப்போமா?’ அவன் சொல்லிவிட்டு அவளின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சிறிது அந்த வார்த்தைகளை யோசித்தாள். உருட்டிக்கொண்டிருந்த அவளின் பார்வை சட்டென விரிந்து பாசாங்கு கோபத்தோடு அவன் முகத்தை பார்த்தது.
‘பொறுக்கி… முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ டா…’ அவள் செல்ல கோபத்தோடு சொன்னாள்.
‘ஒற்றை நீள மஞ்சக்கயிற்றின் பிடியா? சுற்றிய உறவின் அலைக்கழிப்பா? என் வீட்டு படியின் உன் பாதம் தொடுதலா? எது திருமணம் கண்ணம்மா? ஒற்றை நிலவொளியில் உன் முகம் மறித்து மற்றவை காணா நொடிபொழுதில் உன் காதோரம் என் காதலை பதித்த நொடியல்லோ நம் திருமணம் முடிந்தேறிய நொடி…’
‘ஆமா.. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. இதுக்கு தான் கவிஞன கட்டிக்க கூடாதுங்குறது. ஏதாச்சும் பேசி ஏமாத்திருவானுங்க…’
‘எத்தனை கவிச்சொல் காதில் கொண்டாயோ!? உரிமைக்கவிஞன் இந்த ஒருவனற்றோ ஏதாய் ஒற்றனுண்டோ?’
‘யப்பா சாமீ… நான் ஏதோ பாகவதர லவ் பண்ற போல இருக்குடா…’
‘கவிபாடும் காதலன் கொள்ளும் ஆசை உம்மது அல்லவோ இந்த கவிஞனின் காதலும் உம்மது அல்லவோ? காதலோடு கவிச்சொல்லும் எம்…

ஆழப்பதிதல் - தகப்பனாகிய நான் எழுதும் *3

மகளே! பள்ளி உனக்கு பழக்கமாகியிருக்கும்.
தினமும்… பள்ளிப்பாடம் வீட்டுப்பாடம் யென வாழ்க்கை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கும்…
முக்கியமாய் ஒன்று சொல்லபோகிறேன் நான்! நிலவை காட்டவேண்டிய நான் அவசிய அறிவை புகட்டவேண்டிய சூழல் இது கலையுலகில் பொக்கிஷத்தின் தனி தேடலிலோ காலம் கடந்த திருமண கோலத்தில் அம்மையூடோ உம்மை வந்து சேர வேண்டிய அறிவு காலத்தின் கட்டாயத்தால் இப்பொழுதே!
உலகம் அழகு தான்! சுற்றிய மனிதரும், அவர் மனமும் அழகு தான் நிலைக்கொள்ள முடியா சூழலும், செயலும் தினம் தோன்றி மறைகிறது மகளே!
உலகம் நல்லவைக்கொள்ளுதல் போலே தீயவையும் திகட்டக்கொண்டிருக்கிறது! அத்தீயன எமை தீண்டாதென முட்டாள் வேஷமிட்டு

தவிப்பு...

கரைந்துவிட்ட மேகத்தின் கடைசி துளிகள் சிறு சிறு சாரல்களாக தூவிக்கொண்டிருந்தன. போதும் போதுமென ஒவ்வொரு குளமும் குட்டையும் ஆறும் ஏரியும் உமிழ்ந்துக்கொண்டிருந்தன. சென்னையின் ஒட்டுமொத்த இடமும் கொஞ்சம் அலைக்கழிந்து தான் போயிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் தன் அலைப்பேசியை எடுத்து தட்டிக்கொண்டிருந்தான்.
சட்டென எழுந்தான்.
‘எங்க போற…’ அவன் நண்பன் கேட்டான்.
‘உனக்கு தெரியாதா…’
‘சார்… நம்ம முதல் ஃப்ளோர் முழுசா முழுகிடுச்சு. தெரியும்ல…’
‘நாம இருக்குறது சென்டர் இடம். நமக்கே இப்படினா.. அவ இருக்குற ஏரியா தெரியும்ல..’
‘சரி.. அதுக்கு? எப்படி போவ… நம்ம ஏரியாவுக்குள்ளவே வரமுடியாம சோத்துப்பொட்டலத்த ஹெலிகாப்டர்ல போட்டுகிட்டு இருக்கானுங்க..’ நண்பன் சொல்ல அவன் அமைதியாக நின்றிருந்தான். கையை பிசைந்தான். பல்வேறு விசயங்களில் அவன் சிந்தனை சென்றது. மறுவார்த்தை எதுவும் இல்லாமல் படிகளில் வேக வேகமாக இறங்கினான். சுற்றி இருந்தவர்கள் கத்தினர். கேட்கவில்லை. அவனை கால் கீழே வைக்க விடாமல் கழிவுகள் கலந்த நீர் அவனை தாங்கிக்கொண்டது. நீந்த ஆரம்பித்தான். தண்ணீரின் வேகம் செல்ல செல்ல ஒவ்வொரு வீடாய் துணைக்கு பிடித்துக்கொண்டான். அரை மணி நேர…

குழலி பள்ளம்

மலை மேல் நின்றிருந்தவன். கீழே எட்டி பார்த்தான். அடிமேல் அடியாக பல நூறுகளை தாண்டிய பள்ளம். தலை கிறு கிறுத்துவிட்டது அவனுக்கு.
பக்கத்தில் இருந்த வழிகாட்டி அவனுக்கு அந்த இடத்தை பற்றி விளக்கினார்.
இதன் பேர் குழலி பள்ளம்.ஒரு காலத்தில் இந்த இடம் மேடாக தான் இருந்தது. நாயக்கர் காலத்தில் அரண்மனை கட்டுவதற்காக ஒரு சமயம் பல நூறு யானைகளும், வேலையாட்களும் வந்து இரவும் பகலும் தெரியாது கற்களை வெட்டிக்கொண்டிருந்தனர். திடீரென பூமி அதிர்ந்தது. பிளவுண்டது... வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் அலறி அடித்தனர். 'அய்யோ.. அம்மா..' கூட்டம் அலறியது. அடுத்த நிமிடம் கூட்டத்தின் சத்தம் பிளந்த பாதாளத்தின் அடியில் தான் கேட்டது. பெரிய குழி.. பள்ளம். விழுங்கிவிட்டது. அத்தனை உயிரையும். யானையையும் சேர்ந்து விழுங்கிவிட்டது.
மக்களோடும் யானைகளோடும் சரிந்துக்கொண்டிருந்த குழலிக்கு ஒரு கை துணைக்கு வந்தது. இறுக பிடித்த கையின் உரிமையானவனை அவள் உச்சி நோக்கினாள். அவன் கண்ணன். அவளின் காதலன். கண்ணீர் பெருகியது அவளுக்கு. அவன் தன் முழு பலம் கொடுத்து அவளை உயர தூக்க பார்த்தான். ஊர் ஓலமிடும் சத்தத்தில் காற்றும் நின்று போன…