கூந்தல் சுதந்திரம்

நீளக்கூந்தலடி கண்ணம்மா
நின் திசையற்று நீளவில்லையடி
பட்டு நூட்களடி கண்ணம்மா
பலவிஞ்சை மதியோடளிக்குதடி..

காடி நில்லாது
பிட்டம் வரை நீண்டுற்று
முன்புறத்தில் கருவிழித்திரையாகின்
பின்னால் நானல்லோ யென
எனை நாண சிரிக்குதடி..

முடிச்சுகள் முழு முருகாய்
களைதல் முக பொலிவாய் இருக்க
நின்கவின் மறைக்கும் அள்ளி முடிதல்
ஏனோ எமக்கு அந்நியமே!

சிறையிட்ட கைதியாய்
நின்கூந்தல் நிறைக்கொள்ளாதடி
அள்ளிமுடிந்தவையை அவிழ்த்துவிடு
கொஞ்சம் காற்றிலாடட்டும்..,
கிழக்கும் மேற்குமாய் அசைந்து
கொஞ்சம்
வடக்கும் தெற்குமாய் குதித்து..

களைதலாகியதில் நிறைக்கொள்ளும் அழகை
காண கண்ணின் பிசிர்தசையும் பார்வை கேக்குதடி..
சுதந்திர களைதல் கொள்ளட்டும் கண்ணம்மா
நின் கூந்தலும்.. கொஞ்சம் நீயும்!

-தம்பி கூர்மதியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!