மலர் காதல்

மணமுடி காணப்பின் சேர்க்கை
விதை விளைவாய்
அரும்புதழ் தோன்றலின்
பின் நனை முகையாகி மொக்குள்ளாகி
முகிழ்பின் மொட்டுமாகையில்
தோன்றும் நன்நகை
போதுக்கொள்ளுமடி கண்ணம்மா!
நின்கைப்பற்றி நடைக்கொள்ளும் சமயம்
நின்வயிற் போதுக்கொள்ளுமடி!
மலராகிய சமயம்
எம் செல்ல பேச்சுகளோடு பூவாகி நிற்கும்…
அள்ளி அணைத்து
செல்ல ரீங்கார வண்டாய் அலப்பறிப்பேனடி!
கண்ணம்மா!
பூவொன்றாய் வேண்டாமென
பொதும்பர் செய்யவேண்டுமடி…
பூவொன்றற்று பொதும்பரே பொன்கவினடி…
நினைக்கொண்டிரு கண்ணே!
வேடிக்கை போதும்…
ஒன்றுமட்டும் சொல்கிறேன்..
வீயாகி பொம்மலின்பின்னும்
நின்கைப்பற்றல் நீளக்கூடாதடி
பொம்மல் செம்மலாகினும்..

நீளக்கூடாதடி..!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!