Skip to main content

Posts

Showing posts from May, 2017

என் காதல் - மீண்டும் கல்லூரி

நாட்களை கடினமாக தான் கடந்துக்கொண்டிருந்தேன். சரியான பேச்சுகள் கிடையாது. அவள் அப்பாவிடம் பேசியிருக்க வேண்டாமோ என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டேன். அவர் மீது கோபங்கள் எழுந்தன. அவள் என்னிடம் அவ்வபோது பேசினாள். அப்பொழுதெல்லாம் நான் கோபமாக பேசினால் என் தரப்பு நியாயங்களை மட்டுமே பேசுவாள்.
‘அப்பா பேசியது தவறு. அப்பா உன்னை தரக்குறைவாக பேசியிருக்க கூடாது. நான் அப்பாகூட பேசி நாளாச்சு..’ என்று சொல்லிக்கொண்டிருப்பாள். ஒரு விசயத்தை பற்றி கோபம் கொள்ளும்பொழுது எதிர் தரப்பு வாதம் இருந்தால் தான் அந்த கோபம் இன்னும் பெரிதாகும். ஆனால் இங்கு அவள்… என்னை சார்ந்து பேசினாள். அதனால் என் கோபம் முளைத்த வேகத்திலே அடங்கிபோனது.
அதுப்போல அவள் அப்பா அங்கு கோபம் கொள்ளும்பொழுது அவள் எதிர்த்து பேசுவதில்லை. அமைதியாக அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொள்வாள். ஒருவேலை வரம்பு மீறி போகும்போது மட்டும் தான் அவள் எதிர்த்து குரல் கொடுத்தாள். இதை பின்னொரு நாளில் அவளிடம் கேட்டறிந்தேன். மனித எண்ணங்களை எப்படி சமாளிப்பது என்னும் யுக்தி அவளுக்கு தெரிந்திருந்தது.
சில நாட்கள் கடந்தன..
அன்று அழைப்பு.
‘நான் சென்னை வர்றேன்’ அவள் சொன்னாள். எனக்…

என் காதல் - முதல் பிறந்தநாள்...

அவள் வேலையை விட்டு  சென்ற சில நாட்களில் மீண்டும் சென்னைக்கு வந்தாள். இம்முறை வங்கி வேலைக்காக படிக்க போவதாகவும் தனியாக பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுக்க போவதாகவும் சொன்னாள்.
மீண்டும் அவளை சந்திக்கலாம் என்னும் மகிழ்வு. தினமும் சந்தித்துக்கொண்டோம். அளவில் அடங்கா பேச்சுக்களோடு மீண்டும் வாழ்க்கை மீண்டுவிட்டது தான் என்று உணர்ந்தேன்.

நாங்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகு அவளின் முதல் பிறந்தநாள். வாழ்க்கையில் அவள் மறக்க முடியாததாய் இருக்கவேண்டும் என்னும் எண்ணம். காலையிலிருந்து இரவு வரை.. முழு நேரம் அவளுடன் தான் என்னும் முடிவு எடுத்தேன். முழு ஏற்பாடு செய்திருந்தேன்.
காலையில் அவள் விரும்பும் குன்றத்தூர் முருகன் கோவிலில் அர்ச்சனை. அங்கிருந்து அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்க தி.நகர் செல்லவேண்டும். அதை முடித்துக்கொண்டு மதியம் உணவுக்கு ஆதம்பாக்கத்தில் இருக்கும் உதவும் உள்ளங்கள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளோடு மதிய உணவை முடித்துக்கொண்டு, மதியம் அபிராமி தியேட்டரில் ‘வழக்கு எண் 18/9’ படம். முடித்துக்கொண்டு பின் மாலை வேலையில் இரவு ஏழு மணிக்கு மெரினா கடற்கரையில் சர்ப்ரைஸ் கேக் மற்றும் சாக்லேட் டெலிவரி. இரவு ம…

அவள் எங்கே சென்றாள்.. நடுநிசி தேடல்!

’அவ கிளம்புறப்போ உன்கிட்ட சொன்னாளா மா?’ ரகு கேட்டான். மறுப்பக்கம் இருந்து சிறிது நேர அமைதி.
‘இங்க பாரு மா… அவள காணும். நீ சொல்லுறத வச்சு தான் எதுவா இருந்தாலும் கண்டு பிடிக்க முடியும். அதனால உனக்கு என்ன தெரியுமோ அத மறைக்காம சொல்லு…’ ரகு மீண்டும் சொன்னான்.
‘சார்… உண்மையா சார். நான் இனைக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன்… அதனால அவ எங்க போனானு எனக்கு தெரியாது சார்..’ மறுபக்கம் இருந்து அவளது தோழி சொன்னாள். ரகு இணைப்பை துண்டித்துவிட்டு முன்னால் இருந்த மூர்த்தியை பார்த்தான். அவர் கண்ணில் கலவரம்.
‘சார்… என்ன சார் ஆச்சு…’ அவர் கேட்டார். அவன் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.
‘சார்… நீங்க வீட்டுக்கு போங்க. பயப்பட எதுவும் இல்ல.. நான் பாத்துக்குறேன்..’  ரகு சொல்லிவிட்டு எழுந்தான். மூர்த்தியின் கண்கள் இன்னும் பதட்டமாகவே இருந்தது.
‘கான்ஸ்டபிள்… சார அவர் வீட்டுல விட்டுடுங்க. நீங்க எதுக்கோ அவர்க்கு துணையா இன்னைக்கு அங்கேயே இருங்க. சார்.. பொண்ணு வீட்டுக்கு வந்துருவா.. எதுக்கும் பயப்படாதீங்க. நான் போயி பாக்குறேன் சார்..’ அவரை சமாதானபடுத்திவிட்டு ரகு அங்கிருந்து கிளம்பினான். நேராக அவன் வண்டி காலேஜ் முன்னால…