ஓர் அகவை கூட்டுதடி

காணமற நின்சொல்லின் நீளம் அறியாது
காத்திருப்பின் கனம் மெலிதாய் கூடியதடி..
ஒற்றை கூட்டுகளில் உன் அகவை
எனை மிஞ்சி நிற்குதடி..

யானெனல் எண்ணம் அழிந்து
யாமதின் அர்த்தம் பொதிந்த
சொல்லலழிந்த உறவு விளக்குதலின்
நின் ஒற்றைப்பெயருக்கு
ஓர் அகவை கூட்டுதடி..!

கண்ணம்மா!
தூர காரணிகள் கணக்கில் தங்காதடி
மனதோடு என்றும் நெருக்கத்தில்
உன் சுவாசத்தின் காற்று என் காதோடு கூட்டும்
உன் மூக்கிற்கு கூட்டுதடி ஒரு அகவை!

கொடுத்தார் வேலை மறந்து
பார்த்தல் மற பேச்சுச்சொல்லும்
நின் கண்ணாடி கண்களின் பேச்சு
புரியாமல் விழித்திருக்குமடி இந்நேரம்..
அந்த விழித்தலுக்கு ஒரு அகவை கூட்டுதடி..!

சிரிப்புக்கு நான் பிறந்தேன்..
என முட்டிக்கொள்ளும் வாயும்.!
அணிகலனாய் நான் ஜொலிப்பேன்
என பிதற்றிக்கொள்ளும் காதும்..
ஓர் படி ஏறி அகவை கூட்டுதடி..

எல்லாம் ஏறிக்கொள்ள
ஏனோ நான் மட்டும் இறங்குகிறேன்
யென நீண்டுச்செல்லும்
கண்ணம்மாவின் கருங்கூந்தல்…
அகவை தோறும் அடிக்கூட்ட மறப்பதில்லை
கண்ணம்மா..
அவை என்னையும் அதனோடு பின்னிக்கொள்ள மறப்பதில்லையடி..!

கண்சொல்லும் முக உறுப்பின்
வர்ணிப்புகள் போதும்..
ஆண் ஆதிக்கவாதியாகிட போகிறேன்
தூற்றார் அறியிலார்
நின்கவின் நிறையாதல் உன்மனவழகிலே
இந்த அடியேன் விழுந்ததும் அதன் மடியிலே..!

அழகியலே!
கொஞ்சம் மெல்லியதாய் அடியெடுத்துவைப்பாய்
உன் கூட்டிய அகவை படியில்..

கொஞ்சம் மெல்லியதாய்!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி