குப்பைமேட்டில் பள்ளிக்கூடமா?

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் பெரிய ஏரிகள் என்று கணக்கெடுத்தால் சிறிது நாட்களுக்கு முன்பு வரை சிட்லபாக்கம் ஏரியும் ஒன்றாக இருந்திருக்கும். விவசாய பூமிக்கு தண்ணீர் கொடுத்து வந்த ஏரி காலபோக்கில் கான்க்ரீட் கட்டடங்கள் முளைத்த போது நிலத்தடி நீரை பாதுகாக்க உதவி செய்து வந்தது. ஆனால் இன்றோ கார்ப்பரேஷன் கொட்டும் குப்பைகளாலும், உபரி நீராக சேரும் கழிவுகளாலும் ஏரி மொத்தமும் முழுதாய் நாசமாக்கப்பட்டு எதிர்காலமே கேள்விகுறியாக நிற்கிறது. கூடுதல் கொடுமையாக ஏரியின் மொத்த அளவு கோவில், கடைகள் என்று ஆக்கிரமிப்புகளால் முழுதாய் சுருங்கிக்கொண்டே வருகிறது.அதிகபட்ச கொடுமையாக ஏரியின் மீது இருக்கும் அந்த குப்பை கிடங்கின் சுவற்றை பகிர்ந்திருந்து அரசுப்பள்ளி ஒன்று. அங்கு இருக்கும் மாணவர்கள் தங்கள் ஜன்னல் கதவை கூட திறக்கமுடியாமல் அவதிபடுகின்றனர். அந்த குப்பை கிடங்கு ஏற்படுத்தும் நாற்றமும், அதனிலிருந்து வெளிப்படும் கிருமிகளும் எதிர்கால தலைமுறையினரை வாழ்வையே கேள்விக்குறியாக்குவது ஏன் யாருக்கும் தெரிவதில்லை?

Under Municipal Solid wastes(Management and Handling) Rules, 2000 [1]

Site Selection No.8

The landfill site shall be away from habitation clusters, forest areas, water bodies monuments, National Parks, Wetlands and places of important cultural, historical or religious interest.

இதன்படி. குப்பை கொட்ட தேர்ந்தெடுக்கப்பட கூடிய இடம் மக்களின் இருப்பிடத்தின் அருகில் இருக்க கூடாது என்கின்றனர். ஆனால், இந்த குப்பை கிடங்கின் தடுப்பு சுவரே பள்ளியின் கட்டிடம் தான் என சொல்லும்பொழுது உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா? ஏரியின் மேலே கொட்டப்படும் இந்த குப்பைகள் இதை மீறுகிறது தானே!

No 9

A buffer zone of no-development shall be maintained around landfill site and shall be incorporated in the Town Planning Departments land-use plans

குப்பை கொட்டப்படும் இந்த இடத்தில் அடுத்த கட்டிடமே பள்ளிக்கூடம் தான். அங்கிருந்து நூறு மீட்டருக்கும் கம்மியான இடத்தில் பெரியார் தெரு இருக்கிறது. முன்னால் பஞ்சாயத்து அலுவலகமும், மின்சார வாரிய அலுவலகம், போஸ்ட் ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன் என அனைத்து முக்கிய அலுவலங்கங்களும் இருக்கிறது.

No. 10

Landfill site shall be away from airport including airbase. Necessary approval of airport or airbase authorities prior to the setting up of the landfill site shall be obtained in cases where the site is to be located within 20 km of an airport or airbase..

திரிசூலம் ஏர்போர்ட்டில் இருந்து இந்த குப்பை கிடங்கு ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தாம்பரம் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

Facilitie at the site: No. 11

Landfill site shall be fenced or hedged and provided with proper gate to monitor incoming vehicles or other modes of transportation.

போன வருடம் பெய்த மழையில் புதிதாய் எழுப்பப்பட்ட சுவர் இடிந்து விழுந்தது. இப்பொழுது இங்கொன்றும் அங்கொன்றுமாய் தகர பாய் வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் முன்புறம் மட்டும் தான்.

No. 12

The landfill site shall be well protected to prevent entry of unauthorised persons and stray animals.

பூட்டுப்போட்ட ஒரு கதவு மட்டும் தான். நான்கு பக்கங்களில் இருந்தும் யார் வேண்டுமாகினும் வரலாம். நாய்களுக்கு அனுமதி இலவசம். இன்னும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். திடக்கழிவு மேலாண்மையின் விதியில் அந்த இடத்தின் வசதிகள் பற்றி சொல்லும் பகுதி முழுதும் இங்கு மீறப்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

Pollution prevention No. 22.a

Diversion of storm water drains to minimize leachate generation and prevent pollution of surface water and also for avoiding flooding and creation of marshy conditions;குப்பை கிடங்கின் முன்னரே மழைநீர் வடிகால் வாய்க்கால் இருக்கிறது. அதில் குப்பைகள் சேருவது புதிதல்ல.. அவை ஏரியை சென்று அடையாமல் குப்பை கிடங்கை அடைந்து வருகிறது. மேலும் சிறு மழை பெய்தாலே பெருநாற்றமெடுத்து, குப்பை கிடங்கில் இருந்து குப்பைகள் வழிந்து வீதிக்கு வந்துவிடும். மூக்கை பொத்திக்கொண்டு தான் செல்லவேண்டும்.

இவை தவிர்த்து தண்ணீர் மற்றும் காற்றின் மாசு அளவுகள் அளக்கபடவேண்டும். அவை மீறாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று விதி சொல்கிறது. ஆனால் இங்கு மாசாகி கிடக்கும் தண்ணீரையும், காற்றையும் கேட்பாரற்று நாங்கள் கடந்து தான் சென்றுக்கொண்டிருக்கிறோம். இது மட்டுமில்லாமல் ஒரு குப்பை கிடங்கு அமைக்கவேண்டிய விதி பாதிக்கும் மேல் இங்கு மீறப்பட்டு தான் இருக்கிறது என்பது சோகமான உண்மை.

அடுத்த தலைமுறைக்கு நாங்கள் வீடு, இடம் என்று சேர்த்து வைக்க ஆசைபடவில்லை. சுத்தமான காற்றையும், குடிக்க தண்ணீரையும் தான் எதிர்பார்க்கிறோம். பசுமையாக இருந்த இடம் இப்பொழுது நிலத்தடி நீர் வரண்டு தண்ணீர் பஞ்சத்திற்குட்பட்ட பாவப்பட்ட கிராமமாக மாற இந்த ஏரி மாசுபடுதலும் தான் முக்கிய காரணம் என்பதை சம்பந்தபட்ட அதிகாரிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் பயன்பாட்டிற்காக ஏரியை சுற்றி நடைபாதை சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது வரவேற்ப்புக்குரியது. ஆனால் அதனோடு சேர்ந்து ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து நிற்பது தான் கொடுமை. ஒரு பக்கம் குப்பை கிடங்கு, ஒரு பக்கம் வீடுகள், ஒரு பக்கம் கோவில்கள் அதனோடு கடைகள் என மொத்த ஏரியும் சுருங்கி சுருங்கி சுருங்கி பெரிய ஏரி என்ற பட்டமெடுத்தது இன்னும் ஆண்டுகளில் குளம், குட்டை என்னும் பெயர் வாங்கிவிடும் போல. சில வருடங்களுக்கு முன்னரே கிட்டதட்ட 175 ஆக்கிரமிப்பு[2] இடங்கள் இருக்கிறதாக PWD கணக்கு சொன்னதாம். இன்றோ அது 500 களை எட்டி இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. ஒரு காலத்தில் 87 ஏக்கர்[3] அளவிற்கு இருந்த ஏரி சில வருடங்களுக்கு முன்னர் 47 ஏக்கராக குறைந்திருந்தது. இன்று என்ன கணக்கோ!

இது போதாக்குறைக்கு சரியான திட்டமிடல் இன்றி கழிவு தண்ணீர் முழுதும் கலப்பதும் இந்த ஏரியில் தான். இதை தடுக்க ஒரு வழி அரசு செய்யவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் தீரா கோரிக்கையாக இருக்கிறது. பல வருடங்களாக இதுக்காக போராடி வரும் இவர்கள் பஞ்சாயத்து, கலெக்டர், MLA, CM Cell என பல இடங்களில் புகார் கொடுத்தும், தொடர் புகார் கொடுத்தும், இன்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயன்றும் இதற்கு ஒரு தீர்வு கிட்டமுடியா விசித்திர முடிச்சு என்னவோ புரியவில்லை. மக்களுக்காக இயங்கும் அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் பொழுது என்ன தான் செய்ய முடியும்? கண் முன்னே எதிர்காலம் மாசுப்பட்டும், வரண்டு போயும் காணப்படுவதை கண்ணீர் கொண்டு தான் கழுவி விட முடியுமா?

பள்ளியின் சுவற்றை பங்குக்கு எடுத்து நிற்கும் இந்த குப்பை கிடங்கில் இருந்து அந்த பிஞ்சுகளுக்கு விடுதலை கிடைக்காதா? அரசாங்க பதிலை எதிர்பார்க்கிறோம்.

- தம்பி கூர்மதியன்

Ref:

[1] http://www.moef.nic.in/legis/hsm/mswmhr.html[3] http://www.thehindu.com/2003/06/09/stories/2003060906970300.htm

-

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி