Skip to main content

Posts

Showing posts from July, 2017

அப்பா.. கடைசி நமிடங்கள்

இரவுகள் தான் நான் வீடு வந்து சேரும் நேரம். அப்படி ஒரு இரவு தான் அது. இரவுகளில் வீட்டிற்குள் நுழையும் முன் அம்மாவை அலைப்பேசியில் அழைப்பது என் வழக்கம். வீட்டிற்கு ஏதேனும் வேண்டுமா என்று கேட்டு தினமும் வாங்கி செல்வேன்.
அன்றும் அப்படி தான் அம்மாவை அழைத்தேன். எடுத்தது அக்கா.
‘அப்பா கீழ விழுந்துட்டாரு டா. வீட்டுக்கு முன்னாடி இருந்த ஒரு குட்டி சுவத்துல இருந்து.. டாக்டர்கிட்ட போயிருக்காங்க. அப்பா நம்பருக்கு கூப்பிடு..’ அவள் சொன்னாள். அதன் பின் மாறி மாறி அழைப்புகள். எந்த மருத்துவர் என்று தெரியாமல் குழம்பி நின்றிருந்தேன். புரியாமல் வீட்டிற்கு வந்தேன். அதே சமயம் அப்பாவும் வந்துவிட்டார்.
‘என்ன சொன்னார் டாக்டர்..’ நான் கேட்டேன்.
‘ஒண்ணுமில்ல. ரத்த கட்டிதான்..’ அப்பா சொன்னார். ஆனால் முகத்தில் அந்த மலர்ச்சி இல்லை. அடுத்த சில நாட்கள் இன்னும் வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்க மீண்டும் மருத்துவரை நாடினோம். சில பல டெஸ்டுகளை எடுக்க சொன்னார். எடுத்தோம்.மீண்டும் ஒன்றுமில்லை என்று சொன்னார்.
ஆனால் அப்பாவிற்கு அடிவயிறு ஏதோ செய்ய வயிற்றில் கேஸ் நிரம்பியிருக்கிறது என்று நம்பி அதை குறைக்க கை வைத்தியங்கள் செய்தோம…

மீண்டும் பள்ளிக்கு

விட்டுச்சென்ற நினைவெல்லாம் கூட்டிக்கொண்ட பள்ளியின் நினைவுகள். மரத்தடி நிழற் மணல் மீண்டும் என் காலில் ஒட்டிக்கொள்ள கட்டாந்தரை வகுப்பறைக்குள்ளே நுழைகையில் சட்டென இடித்த வகுப்பறையின் வாசல் சொல்லியது ‘குனிந்து செல் நீ இன்னும் இப்பள்ளியின் அரைடவுசர் பொடியன் இல்லை’யென்று!

- தம்பி கூர்மதியன்

குத்துக்கல் ஐயனார்

ஐயன் முதுகேறி ஐயனார பாத்த சமயம் ‘வெட்டறுவா சாமிடா தப்புனா வெட்டிருவாரு’ அம்மா சொன்னா. பொய் வரல, பென்சில திருடல, யாரையும் அடிக்கல ஐயன் பயத்த தாண்டி ஐயனாரு பயத்துல. நாளு கடந்துபோச்சு, நாலு அடி என் உசரம் ஆறடி ஆச்சு… முட்டுத்தெரு செட்டியார் கடை களவாண்டு போச்சு மச்சுத்தெரு பொன்னுசாமி மொவ கற்பழிஞ்சு போச்சு ஊருக்கு ரோடு காசு அரசியல்வாதி வீட்டு கண்ணாடி கக்கூசாச்சு விரக்தி கூடிக்கிட்டு விட்டம் பாத்து நடக்கையில வெட்டறுவா ஐயனாரு மொறச்சு மட்டும் கிடந்தாரு.. குத்துக்கல்லாட்டம்..!
- தம்பி கூர்மதியன்
(நன்றி: குங்குமம் வார இதழ். ஜூன் 16, 2017)

GST – நான் அறிந்தவை!

GST பற்றியசரியானபுரிதல்இன்னும்நமக்குவரவில்லை. GSTல்சாதகமும்இருக்கிறதுபாதகமும்இருக்கிறது. முன்னால்இருந்தவாட்மற்றும்சேவைவரியைதூக்கிவிட்டுஇந்த GST இடம்பிடிக்கிறது.


நேற்றுநான்படித்ததுஒருஉதாரணம். டிராக்டரின்வரிவிலைகுறைந்திருக்கிறது. இதன்மூலம்டிராக்டரின்விலைகுறையும்என