குத்துக்கல் ஐயனார்ஐயன் முதுகேறி
ஐயனார பாத்த சமயம்
வெட்டறுவா சாமிடா
தப்புனா வெட்டிருவாரு அம்மா சொன்னா.
பொய் வரல, பென்சில திருடல, யாரையும் அடிக்கல
ஐயன் பயத்த தாண்டி ஐயனாரு பயத்துல.
நாளு கடந்துபோச்சு, நாலு அடி என் உசரம் ஆறடி ஆச்சு
முட்டுத்தெரு செட்டியார் கடை களவாண்டு போச்சு
மச்சுத்தெரு பொன்னுசாமி மொவ கற்பழிஞ்சு போச்சு
ஊருக்கு ரோடு காசு அரசியல்வாதி வீட்டு கண்ணாடி கக்கூசாச்சு
விரக்தி கூடிக்கிட்டு விட்டம் பாத்து நடக்கையில
வெட்டறுவா ஐயனாரு மொறச்சு மட்டும் கிடந்தாரு..
குத்துக்கல்லாட்டம்..!

- தம்பி கூர்மதியன்

(நன்றி: குங்குமம் வார இதழ். ஜூன் 16, 2017)

Comments

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி