Posts

Showing posts from September, 2017

என் அப்பா

Image
நான் கடற்கரை வந்திருக்கேன். என் முன்னால அலை ஆர்பரிக்குது. இந்த கடற்கரைய பாத்ததும் அப்பா ஞாபகம் தான் வருது. அப்பா. மிடுக்கான உடை.. டிப் டாப் தோரணை. அதட்டும் படி தான் பேச்சு. அவர் சொல்லும் ஒரு விசயத்தை மறுத்து பேச முடியாது. நமக்கே தெரியாம அவர் சொல்லுறத கேட்டுருவோம். அது தான் அப்பா. நான் பாத்து வளர்ந்த அப்பா.
அதனால அவர் ரொம்ப கடினமானவருனு நினைக்காதீங்க. தினமும் சாப்பிடுறப்போ அம்மாக்கு, எனக்கு, அக்காங்களுக்குனு அப்பா ஒரு வாயாச்சும் ஊட்டி விட்டுட்டு தான் சாப்பிடுவாரு. அப்பா எதையும் பெருசா அலட்டிக்காத ஆளு.
சின்ன வயசுல நான் எங்க பாட்டி வீட்டுக்கு  வந்திருந்தேன். அங்க தெருவுல இருந்த பசங்க கூட செம விளையாட்டு. ’கலர் கலர் வாட் கலர் டூ யூ வாண்ட்..’ ஒருத்தர் கேட்டதும் பிடிக்கிறவங்க ஏதாச்சும் கலர் சொல்லுவாங்க. அந்த கலர தேடி நாங்க ஓடணும். அந்த கலர் இருக்குற ஏதாவது ஒரு பொருள நாங்க தொட்டுட்டா எங்கள பிடிச்சாலும் அவுட் கிடையாது. இது தான் அந்த விளையாட்டு.
நானும் விளையாடிகிட்டு இருந்தேன். கூட்டத்துக்கு நடுவுல ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தா. அதே கேள்வி, ‘கலர் கலர் வாட் கலர் டூ யூ வாண்ட்..’. அந்த பொண்ணு சொல்ல …

சிட்லபாக்கம் பிரச்சனை

என்னடா உங்க பிரச்சனை?
காத்து கிடந்தோம் நாங்க - வேர்த்து கிடந்தோம் ஊத்துகுளியா தினம் உருகிபோனோமே.
கேட்டு கேட்டு பாத்தோம் எங்க ஊரு கிடைக்கல புகாரு பட்டியலு போட்டும் ஒரு நாதி கேக்கல முட்டி மோதி புரண்டும் இங்க எதுவும் நடக்கல.
ஏன் சார்.. ஏன் சார்.. எங்க மூஞ்சு பாவமா இல்லயா? ஏன் சார்.. ஏன் சார்.. உங்க வேலைய செய்ய தோணலயா?
ஓ..
ஊரு பக்கம் பசுமை அதுல மேயும் எருமை அட அதுங்க கூட ஓகே நம்ம ஆபிசருங்கள பாக்கே..
ஹா.. அது  சரி
நாப்பது அடி ரோடு கொஞ்சம் ஓடுங்கி நிக்கும் பாரு ஒய்யரமான டர்னிங்கு அங்க உசந்து நிக்கும் பில்டிங்கு கேளு மச்சி கேளு எங்க ஊரு ரோடு அது அபேஸ் ஆன கதைய கேளு.
பறந்து கிடந்த ஏரி இப்ப குப்பையாச்சு நாரி ஊரு மொத்த கழிவு வந்து கலக்குதிங்க பாரு.. கேளு மச்சி கேளு நாரி போன எங்க ஏரி கதைய கேளு!
என்கிட்ட சொல்லாத அவிங்ககிட்ட சொல்லுடா..
சார்… ஏன் சார்.. ஏன் சார்.. எங்க மூஞ்சு பாவமா இல்லயா? ஏன் சார்.. ஏன் சார்.. உங்க வேலைய செய்ய தோணலயா?
சாமீ.. சாமீ.. உனக்கும் இங்க கண்ணு இல்லயா?
அட அதானே. சாமீ எங்கப்பா?
ஏரியில நாலு கோயில் நிக்குது. அது நிரம்பி ஓடுற வழியில மண்டபமும் நாப்பது வீடும் நிக்கிது. ஏரியுள்ள வர நல்ல தண்ணிக்கு நாதியில்ல வெளியதள்ளவோ ஒரு பா…

பசிக்கொண்ட நாக்கு

வெளிக்காற்று மழையில் நான் மட்டும் நனைந்தேனென அந் நா ஈரப்பதம் கொண்டிருக்கும். பண்டங்கண்ட நாய் நா போல.
முதல் முறை நனைந்த நாவிற்கு பாடஞ்சொல்ல வேண்டும் பயிற்சி அறிவிருக்காது.
பலமுறை நனைந்த நாவிற்கு பாடத்தை விடு பார்ப்பதற்கே நேரமிருக்காது.
வெளிமேடையில் சுழன்று பேசும் அரசியல் நாவும் வாயென்றாலே வசையாகும் போலீஸ் நாவும் இப்பொழுது தான் நனைய தொடங்கிய இளகிய நாவும் எனது மாமூல் வாசாலாளிகள்.
பயந்த நா பாசமான நா வெறிக்கொண்ட நா வெகுளி நா பல நாவின் நாட்களை பார்த்தவள் நான்.
எந்நாளும் எந்நாவிற்கும் என் நாவின் மீது கருணையில்லை. என் நா சுரக்கும் ஈரப்பதம் நின்றபின்னும் எதையோ உரிஞ்ச துடிக்கின்றன எனை சூழ்ந்திருக்கும் ‘உன்னத’ நாவு(ட்)கள்.
- தம்பி கூர்மதியன்

வண்டி தம்பி

Image
அவன் பெயர் ரகு. இருபதுகளை கடந்திருந்த ஒரு சாதாரண இளைஞன். அந்த வயதிற்கேற்ற ஆசைகளும் நிரம்ப பெற்றவன். அப்படி ஒரு ஆசை தான் அவனது பைக். நீண்ட நாட்களாக அவனுக்கு ஒரு பைக் வாங்கவேண்டும் என்பது கனவு. அது தான் இன்று அவனுக்கு நிறைவேறியது. ஆனால் எதிர்பாரா விதமாய் மகிழ்வுக்குபதில் அவன் முகத்தில் சோகம் குடிக்கொண்டிருக்கிறது.
‘யப்பா.. என்னைய ஏன்பா  இப்படி படுத்துற..’ ரகு அவன் அப்பாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
‘ஏன்டா.. என்ன ஆச்சு..?’ அவன் அப்பா கேட்டார்.
‘பைக் வாங்கி தர்றேன்னு சொன்னீயே பா’
‘ஆமா டா.. இதுக்கு என்ன? செமயா  இருக்குல..’ அவர் அந்த வண்டியை தட்டிக்கொண்டே கேட்டார். அது ஒரு ஸ்கூட்டர்.
‘அப்பா.. இது லேடீஸ் ஸ்கூட்டரு பா.. மனசாட்சி இல்லயா உனக்கு? இத எப்படி நான் எடுத்துட்டு வெளிய போறது..’
‘வேற என்ன வாங்குறது உனக்கு..’
‘அப்பா.. புல்லட் பைக் பா. இந்த என்னை அறிந்தால்ல அஜித் ஓட்டுவாரே. அப்படி கெத்தா..’
‘டே.. அதெல்லாம் ரிஸ்க். உன்ன போக சொல்லிட்டு  நாங்க வயித்துல நெருப்ப கட்டிகிட்டு நிக்கவா.  ஓவரா கேட்டனா விஐபி படத்துல தனுஷ் ஓட்டுற பைக் தான் வாங்கி தருவேன். மரியாதையா இத ஓட்டுறியா இல்லயா..’ அவன் அப்பா கேட்டதும்…

பேரழகி

Image
’என்னைய உனக்கு பிடிக்கலல..’ அவள் கேட்டாள். அவன் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான். அவள் கண்கள் கண்ணீரை கொப்பளிக்க தயாராகிக்கொண்டிருந்தது. ’இல்ல நான்…’ அவன் இழுத்தான். அவள் அவனது திசை பாராமலே கையை உயர்த்தி காண்பித்தாள். அவன் அதற்கு மேல் பேசவில்லை. வந்த திசையே பார்த்து சென்றுவிட்டான். அவளின் ஓரகண்கள் நடவாத அவனின் மீள்வருகைக்காக காத்துக்கொண்டிருந்தது. அவளது அறைக்கு சென்றாள். அவளது கம்ப்யூட்டரை இயக்கி அவளது படங்களை தேடினாள். அது அவளது பழைய படங்கள். சரியான உடல் வாகு, வட்ட முகம், நீண்ட முடி, அளவான உயரம் – பேரழகி என்றில்லை. அழகிகள் அணிவகுப்பில் முதல் இடம் அவளுக்கானதாய் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. கம்ப்யூட்டரை வைத்துவிட்டு கண்ணாடி முன்னால் வந்து நின்றாள். ‘தீபி.. ஏ.. தீபி…’ கண்ணாடியில் அவள் பிம்பத்தை அவளே அழைத்தாள். ‘ஏன் இப்படி ஆகிட்ட. குண்டா, முகம் கூட பெருசாகி, பாக்கவே அசிங்கமா… சீ… ஒரு குழந்தை பெத்துட்டா இப்படி ஆகிடுவியா? உன் புருசனுக்கே உன்னய பாக்க புடிக்கலயே. கருமம்’ அவள் சொல்லிவிட்டு முகத்தை அறுவறுப்பாக வைத்துக்கொண்டாள். கீழே குனிந்து இன்னும் ஏதோ மொனகினாள். சட்டென நிமிர்ந்த…