சிட்லபாக்கம் பிரச்சனை

என்னடா உங்க பிரச்சனை?

காத்து கிடந்தோம்
நாங்க - வேர்த்து கிடந்தோம்
ஊத்துகுளியா தினம் உருகிபோனோமே.

கேட்டு கேட்டு பாத்தோம்
எங்க ஊரு கிடைக்கல
புகாரு பட்டியலு போட்டும்
ஒரு நாதி கேக்கல
முட்டி மோதி புரண்டும்
இங்க எதுவும் நடக்கல.

ஏன் சார்.. ஏன் சார்..
எங்க மூஞ்சு பாவமா இல்லயா?
ஏன் சார்.. ஏன் சார்..
உங்க வேலைய செய்ய தோணலயா?

ஓ..

ஊரு பக்கம் பசுமை
அதுல மேயும் எருமை
அட அதுங்க கூட ஓகே
நம்ம ஆபிசருங்கள பாக்கே..

ஹா.. அது  சரி

நாப்பது அடி ரோடு
கொஞ்சம் ஓடுங்கி நிக்கும் பாரு
ஒய்யரமான டர்னிங்கு
அங்க உசந்து நிக்கும் பில்டிங்கு
கேளு மச்சி கேளு
எங்க ஊரு ரோடு
அது அபேஸ் ஆன கதைய கேளு.

பறந்து கிடந்த ஏரி
இப்ப குப்பையாச்சு நாரி
ஊரு மொத்த கழிவு
வந்து கலக்குதிங்க பாரு..
கேளு மச்சி கேளு
நாரி போன எங்க
ஏரி கதைய கேளு!

என்கிட்ட சொல்லாத அவிங்ககிட்ட சொல்லுடா..

சார்…
ஏன் சார்.. ஏன் சார்..
எங்க மூஞ்சு பாவமா இல்லயா?
ஏன் சார்.. ஏன் சார்..
உங்க வேலைய செய்ய தோணலயா?

சாமீ.. சாமீ..
உனக்கும் இங்க கண்ணு இல்லயா?

அட அதானே. சாமீ எங்கப்பா?

ஏரியில நாலு கோயில் நிக்குது.
அது நிரம்பி ஓடுற வழியில
மண்டபமும் நாப்பது வீடும் நிக்கிது.
ஏரியுள்ள வர நல்ல தண்ணிக்கு நாதியில்ல
வெளியதள்ளவோ ஒரு பாதயில்ல
ஆனா ஊரு சனம் மட்டும்
சாமீ.. சாமீ..ன்னு சொல்லி
ஆக்கிரமிப்பு இடத்துல போயி
சாமிய கும்பிட்டு கன்னத்துல போட்டுக்குது.
தப்பு செஞ்சவன்லாம் கல்லால போட்டுக்குறான்.

அடபோங்கப்பா…
இன்னுமா உங்க ஊருக்கு நல்லது நடக்கும்னு நினைக்கிற?

சார்..
ஏன் சார்.. ஏன் சார்..
எங்க மூஞ்சு பாவமா இல்லயா?
ஏன் சார்.. ஏன் சார்..
உங்க வேலைய செய்ய தோணலயா?

எங்க ஊரு திரும்ப வேணும் சார்.
நாலு பக்கம் நல்ல காத்தா
நாப்பது  அடியில நல்ல தண்ணீ
நடக்குறதுக்கு பெரிய ரோடா
எங்க ஊரூ திரும்ப வேணும் சார்.

ஆமா.. உங்க ஊரு பேரு  என்ன?

பாக்கம்.. பாக்கம்..
எங்க ஊரு பேரு சிட்லபாக்கம் சார்.
காணும் காணும்
எங்க ஊரோட பெருமையெல்லாம் காணுஞ்சார்.

ஏ.. எவன்டா அவன்?

காத்து கிடந்தோம்
நாங்க - வேர்த்து கிடந்தோம்
ஊத்துகுளியா தினம் உருகிபோனோமே.

அடிங்க..

ஏன் சார்.. ஏன் சார்..
எங்க மூஞ்சு பாவமா இல்லயா?
ஏன் சார்.. ஏன் சார்..
உங்க வேலைய செய்ய தோணலயா?

யப்பா முடியலடா…

ஏன் சார்.. ஏன் சார்..


டேய்..

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி