பசிக்கொண்ட நாக்கு

வெளிக்காற்று மழையில்
நான் மட்டும் நனைந்தேனென
அந் நா ஈரப்பதம் கொண்டிருக்கும்.
பண்டங்கண்ட நாய் நா போல.

முதல் முறை நனைந்த நாவிற்கு
பாடஞ்சொல்ல வேண்டும்
பயிற்சி அறிவிருக்காது.

பலமுறை நனைந்த நாவிற்கு
பாடத்தை விடு
பார்ப்பதற்கே நேரமிருக்காது.

வெளிமேடையில் சுழன்று பேசும்
அரசியல் நாவும்
வாயென்றாலே வசையாகும்
போலீஸ் நாவும்
இப்பொழுது தான் நனைய தொடங்கிய
இளகிய நாவும்
எனது மாமூல் வாசாலாளிகள்.

பயந்த நா
பாசமான நா
வெறிக்கொண்ட நா
வெகுளி நா
பல நாவின் நாட்களை பார்த்தவள் நான்.

எந்நாளும் எந்நாவிற்கும்
என் நாவின் மீது கருணையில்லை.
என் நா சுரக்கும் ஈரப்பதம் நின்றபின்னும்
எதையோ உரிஞ்ச துடிக்கின்றன
எனை சூழ்ந்திருக்கும் ‘உன்னத’ நாவு(ட்)கள்.

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

ஏழு நாட்கள்...