Posts

Showing posts from October, 2017

ஆயாள்

ரவிக்கை மறந்தவள் தலைமுடி இழந்தவள் கூனாகி நின்ற முதுகில் எனை உப்புமூட்டை தூக்கியவள். கதைசொல்லடி என்றால் பாடலாக காலத்தையும் கொட்டிவிடுவாள். சோழனும் சரி சுதந்திர போராட்டமும் சரி சாமியும் சரி இலக்கியமும் சரி அத்தனையும் அவள் கற்பனையில் பாட்டாக என் மூளைக்குள் சுற்றும்.
பல நாட்கள் கடந்து காதல் மனைவியை கரம்பிடிக்கும் செய்தியோடு அவளை காண சென்றேன். அயர்ந்து அவள் மடியில் படுக்க அன்றும் கதைபடலம் ஒன்று. என் தலைகோதிக்கொண்டே தூரத்து வெறிக்கையோடு அவள் சொன்ன பாடல் கதை.
‘செல்லம்மானு ஒருத்தி செங்குருதி முதலா அவ யோனியில வழிய மயக்கம் வந்து பொறவு முழிக்கையில மாமன் நாலு பேரு முறைத்தட்டோட நின்னானாம். பரிசம் போட்டுபுட்டு பல்ல காட்டின கட்ட மாமன் ஒருத்தன் அடுத்த நாலாம் மாசம் முறைக்கட்டி படுக்கைக்கு கூட்டானாம். படுக்கை சமாச்சாரம் பிடிபடும் முன்ன நாலு செத்துப்போச்சாம் அவ நாவு தள்ளிப்போச்சாம் உட்டத புடிச்சுபுட நினச்ச கட்டமாமன் நாலு இரண்டு எட்டா கணக்கு வச்சு முறையா முடிக்கையில.. செல்லம்மா முப்பது வயச தாண்டிப்புட்டா. அன்பு காட்ட வந்த ஆத்தா ’அவர் எப்படி உன்னைய பாக்குறாருனு’ கேட்க செல்லம்மா பதில் ஏதும் சொல்லாம வீட்டு சுத்தி ஓடி வந்த எட்டு புள்ளையையும் …

வெண்கருமை

வெள்ளை சட்டையும் வேட்டியும் பொருத்தமாக வெள்ளை விபூதி பட்டை போட்டிக்கென படிய கிடந்தது நிரம்பிய வெள்ளை தலைமயிற். வரிசைகட்டிய அவர் பற்களும் வெள்ளை தான். அண்டை வீட்டு குழந்தை  காய்ச்சலிலும் பக்கத்து தெரு குழந்தை படிப்பு செலவிலும் ஊருக்கு உதவிகள் தேவைக்கொள்ளும்போதும் அவர் மனமும் வெள்ளையாகிவிடும் – ஊர் வாயில்.
அவ்வெண்மை கருமையானது படர் கருமை மீண்டும் வெண்மை தாராது அவர் மகளின் மனம் கொண்டவன் ரயில் ரோட்டோரம் கை ஒரு புறம், கால் மறுபுறம் வெட்டப்பட்டு கிடந்தபோது அவர் சட்டையில் தெறித்த சிவப்பின் காய்ந்த நிறம் இது – அக்கருமை.

-தம்பி கூர்மதியன்

அழிக்கலையின் நுனிக்கோல் - குறுநாவல்

Image
‘தாத்தா. நீ சொல்றதுக்கு பேரு பப்பட் ஷோ தாத்தா?’ தரையில் உட்கார்ந்திருந்த அந்த சிறுவன் குமரன் உரக்க சொன்னான்.
‘பப்படமா. பொம்மலாட்டம் யா அது.’ பெரியவர் வெங்கடாசலம் சொல்லிவிட்டு சிரித்தார்.
‘அதான் தாத்தா. இங்கிளீஷ்ல அதுக்கு பேரு பப்பட் ஷோ வாம்.’ அவன் சொன்னதும் அவர் ‘ஓ’வென சொல்லி கேட்டுக்கொண்டார்.
வெங்கடாசலம் மிகப்பெரிய பொம்மலாட்ட கலைக்காரர். நாற்பது வருடம் முன்பு வரை கோட்டைக்காரன்பட்டி வெங்கடாசலம் என்று சொன்னால் தெரியாதவர் எவரும் இலர். முனிவர் வேஷமிட்ட ஒரு பொம்மை முன்னால் நடந்து வரும். கூட்டமே உற்று பார்த்துக்கொண்டிருக்கும்.
‘முன்னொரு காலத்திலே.’ அந்த கர்ஜிக்கும் குரல் அந்த இடத்தையே ஆக்கிரமித்துக்கொள்ளும். மொத்த சனத்தின் நெஞ்சும் படபடவென அடித்துக்கொள்ளும். உடல் ரோமங்கள் எழுந்து நட்டு நிற்கும்.
‘நம்ம பாரத தேசத்துல. காசிபர்னு ஒரு முனிவர் வாழ்ந்துட்டு வந்தார். அவருக்கு திதி, அதிதினு இரண்டு பொண்சாதிமாருங்க. முனிவருக்கு பொஞ்சாதியானு சிரிக்காதீகடீ.’ கர்ஜிக்கும் குரல் கேட்கும்பொழுது அந்த முனிவர் பொம்மை கூட்டம் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு விலகும். அரக்கன் இரணியன் தொடங்கி இரணியன் சபதம், பி…