அகதி ஆகினோம்!புதுக்கூட்டம் புகும் முகத்திரையிட்ட
மானிடர் கூட்டத்தின் இடையே
நான் தனியாளாக நடந்து செல்கிறேன்.

எம் மண்ணோடு நான் கொண்ட
ஆரத்தழுவ போராட்டத்தை
காக்கி உடுப்புகள்
மென்று உதப்பி துப்பிவிட்டன.

வீட்டு முட்டத்தில் கண்ணீர் பெருக்கெடுக்க
தூரத்தில் சாய்ந்துக்கொண்டிருந்த‍து
என் அய்யன் நட்டுவைத்த தென்னமரம்.

என் வீடும் எனை ஆரத்தழுவிக்கொண்டது.
அதுவும் இப்படி தான் இடிந்து சாய்ந்துவிடும்
இன்னும் கொஞ்ச நாளில்.
அய்யன் ரத்தம் ஊறிய கற்கள்
மண்ணாய் பின் மக்கியதாய் மாறிவிடும்.

ஊர் இறங்கி நடக்கையில்
ஊரே இருண்டு ஒருவருக்கொருவர் பாவ பார்வை பார்த்துக்கொள்ள
இன்னும் ஏதோ ஒவ்விரண்டு பெருசுகள்
சர்க்காரோடு மல்லுக்கட்டிக்கொள்கிறார்கள்.

மோட்டார் கொட்டாய் அது
தலையை நனைந்துக்கொண்டேன்.
இதற்கு தேதி அடுத்த வாரம் திங்கள் கிழமை.

வெறித்து நிற்கும் வயல்கள்
வெதும்பி எனை நோக்குகின்றன
கட்டியணைத்து அழுவதையறுந்து
வேறென்ன நான் செய்ய?

தங்கை மணமுடித்த ஊரில்
ஏதோ வீடு ஒட்டி இருக்கிறது.
நானும் சென்று ஒட்டிக்கொள்ளலாம்.
ஏதோ ஒரு ஊரில், யாரோ மனிதருக்கு மத்தியில்...
அகதியாய் - உரிமையற்றவனாய்
நானும் வாழ்ந்து போக செல்கிறேன்.

ஏனோ அது நினைக்கையிலே
எங்கள் ஊரோடு ஒட்டி வந்த சின்னசாமி
சொந்த சனம் நினைவா கிடந்தே
உசுர விட்டு போன நொடி
மண்டைய தட்டி போகின்றன.

'அண்ணே ஏதோ பேப்பர விட்டு போறீக'
ஓடிவந்த பையன் விட்டு போன பேப்பரிலே
என் எட்டு காணி நிலத்தையளந்து ஒன்றரை காணியாகி
இருநூறு தென்னையில் இருபது மிச்சமாகி
மோட்டார் ஒன்றும் காணாமல் போயிருந்த‍து.
மேலும் அரசாங்க ஏட்டு படி,
என் பூட்டன் ஆண்ட ஊரில்
எனக்கென்று ஒத்த கல்லு வச்ச வீடு கூட இல்லை.

வெறித்து அப்பேப்பரை மடித்து உள்ளே வைக்கயிலே
எட்டு வீட்டு தள்ளிய கோனாரு
அவரு பொஞ்சாதிய அடிச்சு கிடந்தாரு
'எங்கடி போச்சு சர்க்காரு பேப்பரு?
நஷ்ட ஈடு கிடைக்காது' என்று புலம்பிக்கொண்டே.

90களின் மத்தியில்
சர்க்காரின் ரயில் ரோட்டை
தன் நிலத்தில் தாங்கிய கோனார்
மடிப்பு கலையாமல் அந்த பேப்பரை
தடவி எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டார்.
முப்பது வருட பத்திரமாக!

Comments

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..