Posts

Showing posts from September, 2018

கானல் தேடல்

Image
அவன் இனியன். இனியமுதன். அவன் வீட்டின் கதவுகள் அவன் கை படர்ந்த‍து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர். அவன் இல்லாத வெறுமை ஒரு காலகட்டத்தில் அந்த வீட்டில் அவன் மீதான வெறுப்பாக உருமாறி இருந்தது.
வீட்டிற்கு மூத்தவன். அவனுக்கு பின்னால் ஒரு தங்கை. அப்பா அரசாங்க அலுவலகத்தில் க்ளார்க். பிள்ளை தலையெடுக்கும் வரை பல்லை கடித்துக்கொண்டு ஓட்டிவிட வேண்டும் என கடினமாக உழைத்தவர்களில் அவன் அப்பாவும் ஒருவர். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
கல்லூரி மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் தான் அது நடந்த‍து. இனியன் வீட்டை விட்டு வெளியேறினான். அதன் பிறகு இப்பொழுது தான் அவன் வீட்டிற்கு திரும்புகிறான். அவன் அப்பாவின் உயிரற்ற உடலை ஊரார் தீயிட்டதை கேட்டான். அவன் தாயும் தங்கையும் மாரில் அடித்துக்கொண்டு ஓலமிட்ட சத்தம் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் அவன் காதுகளில் ஒலித்தது. அப்பா இறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது - செய்தி தாங்கியவன் சொன்னான்.
முப்பது பேரை தாங்க கூடிய பேருந்து அது. ஒரு நூறு பேரை தாங்கிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த‍து. ஜன்னல் என்று சொல்லும் அளவு இல்லை. ஆனால் வெளியில் தொங்கிக்கொண்டிருந்த ஆட்களை நகர்த்திவிட்டு பா…

அது... கொலை!

Image
விக்ரமின் அறை அது. அமைதியாக அந்த அறையில் அவன் சிகரெட்டை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

’யூ ஆர் ட்ரான்ஸ்ஃபர்டு..’ விக்ரம் காதில் அந்த அதிகார சத்தம் கேட்டது.

‘எனக்கு உன் வேலை.. நீ எத நோக்கி ஓடுற.. ஏன் இப்படி இருக்க. எனக்கு எதுவுமே புரியல விக்ரம். காலேஜ்ல நீ இப்படி இல்லவே இல்ல. இத்தன வருசத்துல உன்ன லவ் பண்ணினத நினச்சு சந்தோசப்பட்டதோட ஏன்டா லவ் பண்ணினோம்னு வருத்தம் தான் அதிகமா இருக்கு விக்ரம்..’ மனமுடைந்த அந்த காதல் வார்த்தையும் கேட்டது.

‘ஐயோ என் பொண்ணு.. என் பணம் போச்சே.. என் குழந்தை… என் அப்பாவ கொன்னுட்டாங்களே.. ஐயோ… ஐயோ.. ஐயோ..’ மாறி மாறி அலறல் சத்தம். சட்டென காதை மூடிக்கொண்டான் விக்ரம். அவன் கையில் இருந்த சிகரெட் ஒரு இழுப்புக்கு பிறகு மீண்டும் ஒரு இழுப்புக்கொள்ளாமலே சுருங்கிவிட்டது. அடுத்து அவன் கையை சுட்டும் விட்டது.

சட்டென சிகரெட்ட்டை கீழே போட்டான். கையை உதறினான். தன் அலைப்பேசியை எடுத்து உள்ளே சென்றான். அங்கு இளமை பருவத்தில் ஒரு பெண்ணின் புகைபடங்கள் இருந்தன. குழந்தை தனமான சேட்டைகளாய் முக பாவனைகள் கொடுக்கும் புகைபடங்கள் அவை.

உதட்டின் ஓரம் மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரித்தான். …

டேனியல் புலாய்

Image
’நான் இப்போ தென் ஆப்ரிக்கா நோக்கி போயிட்டு இருக்கேன். இன்னும் மூணு மணி நேரத்துல என் ஃப்ளைட் தரை இறங்கிடும். நான் புலாய் பாக்க போறேன். ஆமா.. டேனியல் புலாய். கடல் கடந்திருந்தாலும் என் உயிருக்கு உயிரான நண்பன் அவன். ஆனா இவ்வளவு தூரம் நான் பயணிக்கிறதுக்கு காரணம் அந்த நட்பு மட்டுமில்ல..’ அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களின் முடிவில் அவன் உதடு ஒரு சிரிப்பு சிரித்தது. ஒரு பெருமூச்சு விட்டான். கண்ணை மூடி திறந்தான். தனக்கு தானே சிரித்துக்கொண்டான்.
டேனியல் புலாய் மாமல்லபுரத்திற்கு ஒரு பெரிய குழவோடு ஒரு சுற்றுலா பயணியாக வந்தான். அப்பொழுது அவர்களை போலவே வட்ட தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு, முக்கா டவுசரோடு நின்றுக்கொண்டிருந்தவன் தான் ரகு.
‘சார்.. சார்.. ஃபுல் ரவுண்டு ஐ சுத்தி காட்டிங் சார்.. ஃபுல் ரவுண்டு..’ அவன் பேசும் ஆங்கிலம்(?) புலாய்க்கு பிடித்திருந்தது. அவன் பேசிக்கொண்டே இருக்க புலாய் சிரித்துக்கொண்டே நடந்தான்.
‘யோவ்.. என்னயா பேசிட்டே இருக்கேன். நீ சிரிச்சுட்டே இருக்க?’ ரகு கேட்டான். புலாய் முழித்தான்.
‘வொய்.. வொய்.. லாபிங்..’ ரகு கேட்டான்.
‘Your language is interesting. Don’t speak wrong Eng…