இயல்பு

​முடிவில்லா பயணங்கள் மீது
அளவில்லா காதல் கொள்கிறேன்.

தேவையே இல்லா தேடல்களில்
சமயங்களில் நேரத்தையும்
சில நேரங்களில் என்னையுமே தொலைத்துவிடுகிறேன்.

கண்முன்னே காண்பனைத்தும் மாயை.
மனித நாகரீகம்,மொழி,தேவை அனைத்தும்..
அன்பும் தான்.
அன்பால் பின்னப்பட்ட உறவுகளும் சேரும்.

யார் என்னது எனும் கேள்விக்குள்ளே
ஆயிரம் திணிக்கப்பட்ட மாயைகள்.

உலகத்தின் சஞ்சாரம்
யனைத்தும் கடந்த அணுச்சேர்க்கை.
சூழற் மட்டுமல்ல நானும் என் உடலுமே
நுண்ணிய அணுசேர்க்கையன்றி வேறில்லை.

மாயை கடந்தது இயல்பு மட்டுமே.
மாயையின் பரந்த நிலப்பரப்பில்
கொஞ்சம் விலகி நிற்பவனும் அவனே.
இயல்பு...
இம்மையில் என்தேடல் முடி கொண்டவை
இயல்பன்றி வேறில்லை.

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..