Posts

Showing posts from April, 2019

காலையும்.. காதலும்..

என் இமைகளை
தொட்டு நகர்ந்திடும்
காலை மேகங்கள்
எம்பெண் தீண்டலின்
சுகம் தருமோ?சூரியன்
எட்டி விளிக்கையில்
அவன் சிவந்த வர்ணத்தில்
அவள் நுதல் கோலங்கள்
தெரிந்திடுமோ?தீராத காதல்கள்
தீயாக என்னுள்ளே
வானவில்லின் வளையங்களாய்
வட்டமகின்றனவே.முன்பனிக்கூட்டங்கள்
முழங்கால் நனைதல்கள் தரும்
படர் புல்வெளியோடு
இணை நடை தருமோ..?மரங்களும்
அதன் கிளைகளும்
மெல்லிய சாரலை
தூவி நகைத்திடுமோ?காலையும் காதலும்
வெவ்வேற்றுமை கொள்ளாது
அதி இன்பங்கள் ஈய்கிறது.
காலையும்... எம் காதலும்...-தம்பி கூர்மதியன்